முற்றுப்
புள்ளி
வானம் இருண்டது போல்
மனமும் இருண்டிருக்கு
சோ என்று கொட்டும் மழையிலும்
சர் என்று கிழித்தக்கொண்டு
வாகனங்கள் ஓடுது
வாழ்கை மட்டும் துயரங்களை
கிழித்துக்கொண்டு
ஓட முடியாமல் தவிக்கிறது
கரையை மோதும் ஓயாத
கடல் அலை போலே
நினைவலைகள் நெஞ்சில்
மோதி செல்கிறது
பிறந்ததும் வளர்ந்ததும்
வீணே மடிவதற்க்கா
உலகில்
சாதித்தவர்கள் கூட
சாகாமல் வாளவில்லை
பணத்தை குவித்தவன் கூட
ஆயுளை நீடிக்க வளி காணவில்லை
மண்தின்னும்
உடலுக்குள்
எத்தனை
ஆசைகள்
வாழ்க்கையில்
எத்தனை போராட்டம்
இலைகள்
கூட இலையுதிர்
காலத்தில்தான்
உதிரும்
ஆனால்
மனித உடல் எப்ப விழும்
என்பது
யாருக்கும் தெரியாது
யாருக்கு
யார் துணை
அது கூட
நிலைப்பதில்லை
மழை துளி
மண்ணை
தொடுவது
போலே
மனித வாழ்வுக்கும்
ஒரு முற்றுப்
புள்ளி உண்டு
இன்றோ
நாளையோ
அதை யார்
அறிவாரோ
கவி மீளா
எண்ணமே இவ்வாழ்வும் எண்ணமே மறு வாழ்வும்.....எதை விதைதாயோ அதை மறு வாழ்வில் நிச்சயம் அறுவடை செய்வாய் .
AntwortenLöschenThanks
AntwortenLöschen