Montag, 9. März 2015


முற்றுப் புள்ளி

வானம் இருண்டது போல்

மனமும் இருண்டிருக்கு

சோ என்று கொட்டும் மழையிலும்

சர் என்று கிழித்தக்கொண்டு

 வாகனங்கள் ஓடுது

வாழ்கை மட்டும் துயரங்களை

கிழித்துக்கொண்டு

ஓட முடியாமல் தவிக்கிறது

கரையை மோதும்  ஓயாத

கடல் அலை போலே

நினைவலைகள் நெஞ்சில்

மோதி செல்கிறது

பிறந்ததும் வளர்ந்ததும் 

வீணே மடிவதற்க்கா

உலகில் சாதித்தவர்கள் கூட 

சாகாமல் வாளவில்லை

பணத்தை குவித்தவன் கூட

ஆயுளை நீடிக்க வளி காணவில்லை

மண்தின்னும் உடலுக்குள்

எத்தனை ஆசைகள்

வாழ்க்கையில் எத்தனை போராட்டம்

இலைகள் கூட இலையுதிர்

காலத்தில்தான் உதிரும்

ஆனால் மனித உடல் எப்ப விழும்

என்பது யாருக்கும் தெரியாது

யாருக்கு யார் துணை

அது கூட நிலைப்பதில்லை

மழை துளி மண்ணை

தொடுவது போலே

மனித வாழ்வுக்கும்

ஒரு முற்றுப் புள்ளி உண்டு

இன்றோ நாளையோ

அதை யார் அறிவாரோ

கவி மீளா

 

2 Kommentare:

  1. எண்ணமே இவ்வாழ்வும் எண்ணமே மறு வாழ்வும்.....எதை விதைதாயோ அதை மறு வாழ்வில் நிச்சயம் அறுவடை செய்வாய் .

    AntwortenLöschen