Dienstag, 21. Mai 2013


கொன்றை பூ

"தாரமர் கொன்றையும் சண்பக மாலையும்

சாத்தும் தில்லை ஊரர்தம் பாகத்து உமை

மைந்தனே (அபிராமி பட்டர்)

கொன்றை பூ சிவனுக்கு உகந்த பூவாகும் கொன்றை மலர்  சூடியவன் என சிவனை சொல்வார்கள் கொன்றையில் பல இனம் உண்டு அவையாவன புலிநகக்கொன்றை – மயில்க்கொன்றை – சரக்கொன்றை - செங்கொன்றை  -கருங்கொன்றை சிறுகொன்றை -  மந்தாரக் கொன்றை மற்றும் முட்கொன்றை என்பனவாகும்  அதிலே ஒரு இன கொன்றை மரங்கள் இங்கும் ஜேர்மனியிலும் (Germany ) காண படுகின்றன  இந்த மரங்களும் சித்திரை வைகாசி மாதங்களில்தான் பூத்து குலங்குகின்றன மஞ்சள் வண்ணதிலுள்ள இந்த பூக்களை பார்த்து கொண்டே இருக்கலாம் அப்படி ஒரு அழகு மரத்தில் இவை பூத்திருக்கும் போது

கொன்றை பல மருதுவ குணங்களை கொண்டது என இயற்கை மருத்துவர் சொல்கின்றனர் மலசிக்கலை போக்க வல்ல அரிய மருந்தாக ஊரிலே பயன்படுத்துகிறார்கள்  ஆனால் இங்குள்ள மலர்கள் அந்த மருதவ குணமுள்ளனவா என்பது தெரியாது இங்கு அழகுக்காவே இந்த மரங்கள் வீட்டு தோட்டங்களில் நடபட்டுள்ளன கொன்றை மலர்கள் மரத்தில் மிக அழகாக தொங்குகின்ற காட்ச்சி மனதை சுண்டி இழுக்கும்  மஞ்சள் வண்ணதில் அவை நீளமாக கீழ் நோக்கி தொங்கும் அழகே அழகுதான்

நிறங்களில் பலநிறங்கள் இருந்தாலும் மஞ்சள் நிறம் ஒரு மங்கலமான கண்ணுக்கு குளிர்ச்சியான நிறமாகும்  அதனால்தானோ என்னுமோ மஞ்சள் நிற பூக்ளும் எமது மனதை மிகவும் கவர்கின்றன  வெளிநாட்டில் பூக்களை அதிகம் பறித்து கொள்ள மாட்டார்கள் அவற்றின் பயனை நாம் ஊரில்தான் அதிகம் உணர்வோம் காரணம் பூசைக்கு மலர்களை பறிபதுடன்  மாலைகள் கட்டி மணமாலையாகவும் பிணமாலை வரவேற்புமாலை என எங்கும் பூமாலை அங்கு தேவை படுகிறது

கொன்றை பூக்களை பற்றி பல பாடல்கள் உள்ளன இலக்கியத்தில்  சரக்கொன்றை பூக்கள் உதிரும் போது கூட அழகாக இருக்கும் தங்க மழை பொழிந்தாற் போலே அந்த இடம் காட்ச்சி தரும்

பொன்னென மலந்த கொன்றை மணியெனெத்

தேம்படு காய மலந்த தொன்றியொடு

நன்நலம் எய்தின பிறவே நினைக்

காணிய வருதும் நாமே

வாள்நுதல் அரிவையொடு ஆய்நலம் படர்ந்தே   - (ஐங்குறுநூறு- பேயனார் முல்லை திணைதலைவன் சொன்னது)

சங்க காலத்து இலக்கியங்களில் காணப்பட்ட 99 பூக்களில் இந்த கொன்றை மலர்கள் பெரும் இடத்தை பிடித்துள்ளன அதைவிட ஆன்மீக சிறப்புக்களை சொல்ல சிவன் தலையிலே சூட பட்ட கொன்றை என பாடல்கள் உள்ளன

„பாடல் வண்டறை கொன்றை பான்மதி பாய்புனற் கங்கை

கோடல் கூவிள மாலை மத்தமுஞ் செஞ்சடைக் குலாவி

வாடல் வெண்டலை மாலை மருவிட வல்லியந் தோண்மேல்

ஆடன் மாசுண மசைத்த அடிகளுக் கிடமர சிலியே“

பூசைக்கு உகந்த மலர்களில் கொன்றையும் ஒன்றாகும்  இந்த கொன்றை மலர்கள் வசந்த காலத்தை வரவேற்பது போலே சித்திரை வைகாசி மாதங்ளில் எங்கும் பூத்து குலங்ககின்றுன கொன்றை பூக்கும் காலங்களில் காடுகளே அழகு பெறுவதாக இலக்கியதில் கூறபட்டுள்ளது

நாமும் இக்காலங்களில் கொன்றை பூக்களின் அழகை ரசிப்பதுடன் கொன்றை மாலை அணிந்த சிவனை வழிபட்டு பிறவி பயனை அடைவோமாக
கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen