Dienstag, 22. September 2020

 


அமைதி

எங்கு தேடியும் அமைதி கிடைக்காத போது

அமைதியை நாமே மனதில் உருவாக்க வேணும்

அதற்கு ஆசைகளை துறவுங்கள்

ஒவ்வொரு ஆசைகளாய் கை விடுங்கள்

நெல்லுக்கு களை எடுபது போலே எம்மை

சுற்றி வரும் உறவுகளுக்குள்ளும்

களை பிடுங்கி எறியுங்கள்

நாம் போகும் பாதையிலுள்ள நெருஞ்சி

முட்ககளை தூக்கி தூர வீசுங்கள்

 

உடலுக்கு ஒய்வு கொடுப்பது போலே

 நம் சிந்தனைக்கும் ஓய்வு கொடுங்கள்

உடலில் உள்ள அழுக்கை கழுவி விடுவது போலே

அகத்தே அழுக்கு சேராமல்

தூய்மையான மனதை பேணுங்கள்

காசுக்கும் காமத்துக்கும் அலையாதீர்கள்

பொறாமை கொண்ட உறவுகளை சேராதீர்கள்

கடவுளை நம்புங்கள் உங்கள் கடமைகளை மட்டும் செய்யுங்கள்

 

ஆரோக்கியத்தை பேணுங்கள்

அடுத்தவனது வீட்டை பார்த்து ஏங்காதீர்கள்

கடைசியில் எதுவும் கூட வராது

என்பதை நினையுங்கள்

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்தாக

இருபதை கொண்டு நிறைவாக வாழுங்கள்

இதுவே அமைதியை தரவல்லது!

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen