Samstag, 7. November 2015

இந்த ஆண்டவனின் செயலை பாரு
 
நாறுகின்ற குடலை வைத்து
அதில் ஒன்பது வாசல்வைத்து
உடல் என்னும் போர்வையால்
மூடிவைத்தான் மனிதனை
 
மூளையில் அறிவை வைத்து
மூச்சு குளாயில் சுவாசம் வைத்து
உயிர் மூச்சை உள்ளடக்கி
ஊதி வைத்தான் உடல்  என்னும்
காற்றடைத்த பந்தை
 
ஆசை என்னும் உணர்வை வைத்து
அவணியிலே அலைய வைத்து
அழுகை என்றும் சிரிப்பென்றும்
நவரச உணர்வும் வைத்து
அவணி என்னும் மேடையிலே
ஆட விட்டான் மனித பொம்மையை
 
நாவினிலே சுவை வைத்து
நரம்பில்லாத நாவாலே
தீயதையும் பேச வைத்து
பாதகங்களும் செய்ய வைத்தான்
பாவி மனிதர் வாழ்வினிலே
 
பாசம் என்றும் நேசம் என்றும்
உறவுகளை சேர்த்து வைத்து
 பிரிவு என்னும் புயல் காற்றை வீசி
சிதற வைப்பான் மனங்களை
 
நித்தமும் ஓர் நாடகம்
நடத்தி வைப்பான் பாரினிலே
நினைவு என்னும்  பேரலையை தந்து
துடிக்க வைப்பான் மனங்களை
ஆடிய ஆட்டம் எல்லாம்
அடங்க வைப்பான் ஒரு நாளில்
உள் மூச்சு வாங்கையிலே
உயிர் மூச்சும் அடங்கி விடும்
அவன் செயலில்
 
கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen