Samstag, 17. Oktober 2015

அடிமை விலங்கு
நானா இது நானா இது?
என்று நம்ப முடியவில்லை
வாசல் தாண்டா பெண்ணாக
வாழ்ந்ததுதான் உண்மை
இன்று அடுத்த பெண்களுக்கே வழி காட்ட
என்னை மாற்றியது யார்?
மாறியதும் நானா?
 
அடிமை விலங்குகளை
 உடைத்தெறி பெண்ணே
சிறை கதவாய் நிக்கும்
உறவுகளை தூக்கியெறி முன்னே
படைத்தவன் யாரோ
உன்னை பெற்றவரும் யாரோ
உன்னை அடைத்து வைக்க
முயல்பவன்தான் யாரோ?
 
யாருக்கும் யாரும் அடிமை இல்லை
அன்புக்குதான் அடிமை என்று
எடுத்து காட்டாய் வாழ்ந்து விடு
எழுத்தாணியை கையில் எடுத்து விடு
ஏறு பிடித்தவனும் எழுத்தாணி எடுத்தவனும்
சரிந்ததாய் சரித்திரம் சொன்னதில்லை
 
சாவுக்கும் அஞ்சாமல் வாழ்ந்த விடு
உண்மைக்கு மட்டும் பணிந்து விடு
உயிர் உள்ள வரை குற்றங்களை
தட்டிக்கேட்டு விடு
ஊர் வாயை மூட முடியாது 
மூடர்கள் கூட்டம் உள்ள வரை
ஏற முயன்றால் இழுத்து விழுத்தும் மனிதர்களும்
உயர்ந்து நின்றால் தூற்ற நிக்கும் வாய்களும்
நிலவை பார்த்து குரைக்கும் நாய்கள்
என்று நினைத்தே நீ நட பெண்ணே
நீ நட பெண்ணே
 கவி மீனா
 

Keine Kommentare:

Kommentar veröffentlichen