Donnerstag, 13. November 2014


இலையுதிர்காலம்
 
 
 

வாழ்க்கை சுவாரிஸயம் இல்லா து போனாலும் கூட

எம்மை சுற்றி நடப்பவை யாவும் சுவாரிஸயமே

காலை எழும் கதிர் மாலை மறையும் வரை

இயற்கையில் எத்தனை அசைவு

எத்தனை அழகு

காற்றின் அசைவில் கொட்டும் இலைகள்

பல நிற வண்ணத்தில் பறக்கும் எங்கும்

இலை மழை தூவி இயற்க்கை எம்மை வாழ்த்த

வந்தது இலை உதிர் காலம்

பல நிற காட்டி மரங்களும் சொல்வது

மனிதனின் வாழ்கையின்  நிலையையே

வேனிற்காலம் கோடைகாலம்

இலையுதிர்காலம் குளிர்காலம்

என கால நிலையும் நான்கு

பிரம்சாரியம் இல்லறம் வானபிரஸ்தம் துறவறம்

என மனிதர் வாழும் முறையும் நான்கு

காய்ந்த இலைகள் விழுவது போலே

மனிதரும் முதுமையில் விழத்தானே வேணும்

காய்ந்த சருகுகள் காற்றில் பறப்பது போலே  

மாண்டவர் உயிரும் பறக்கத்தானே வேணும்

இயற்கையில் கூட படிப்பினை உண்டு

அதை காணும் கண்களுக்கு

தீர்க்க தரிசனம் உண்டு

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen