Samstag, 19. Oktober 2013


உறங்காத உண்மைகள்

 ஊர் எல்லாம் உறங்கையிலே நான் உறங்காது விழித்திருந்தேன்

உண்மை ஒன்று உள்ளத்திலே உறுத்தவே விழித்திருந்தேன்

காலம் எல்லாம் அழகு பார்த்து காத்து வரும் இந்த காயம்

கண்ணெறி பட்டதனால் காய்ந்து போயும் விடும்

மாறாத நோய்கள் வந்து மனதையும் தாக்கிவிடும்

அழகிழந்து பலம் இழந்து பாடையிலே போகும் வரை

ஆணவம் தான் நிலைத்து நிற்க்கும்

காற்று ஒன்று வெளியே வந்தால் காயமே இது பொய்யாகும்

இது காற்றடைத்த ஒரு பையாகும்

மாயையில் உழருகின்ற இந்த மாயா உலகத்திலே

மாழ்ந்து போனோமே இங்கு மாழாமல் வாழ்பவர் யார்?

என்னது உன்னது என்று எத்தனை சண்டை இங்கே

இதனால் உடைவது எத்தனை மண்டை அங்கே

இந்த வாழ்க்கையில் காண்பதும் எத்தனை பிரிவு

இறுதியில் நாம் போவதோ ஒரு தனி வழி தானே?

முடிவில்லா வானத்திலே பறந்து நாம் போகையிலே

முடிவாக எம்முடன் கூட வருவதுதான் எந்த உறவு?

இதற்க்குள் வாழுகின்ற போது வீணான தொல்லைகள் ஏன் நமக்கு?

ஆளுக்கு ஆள் அடிமை என்றும் அகம்பாவ பேச்சும் கொண்டு

நட்புக்குள் துரோகமும் செய்து நம்பிக்கை மோசமும் செய்து

எட்டிக்கு போட்டியாய் ஏக்கத்தாள பேச்சோடு

இல்லாத வம்பு சண்டைகள் தான் ஏன் வளர்ப்பு? 

இல்லை ஒரு சொந்தம் எமக்கும் என்றும் துணை நிற்க்க

இறுதியிலே கூட நம்மோடு வருவதற்க்கும்

இருக்கும் வரை ஏமாற்றம் ஏன் இந்த தடுமாற்றம்

மற்றவரை ஏமாற்றி நீ காண்பதென்ன? கொண்டாட்டம்

அடுத்தவன் வாழ்க்கையிலே நீ செய்யும் சோதனையால்

நீ படும் களியாட்டம் அது உன் சாதனையா?

சத்தியத்தின் வழி நடந்தால் சாகும் வரை நின்மதியே

மனச்சாட்ச்சி கேட்பதற்க்கு கேள்விகளும் இல்லையே

நீ மலர்களை மிதிக்காதே முள்ளையும் மிதிக்காதே

நீ நடக்கும் பாதையிலே மனங்களையும் நசுக்காதே

கூடாத உறவெல்லாம் எட்டாமல் எட்டி வீடு

ஆகாத சொந்தங்கள் அத்தனையும் மறந்து விடு

உன்னால் முடிந்தால் உதவிகள் செய்துவிடு

முடியாது போனால் உள்ளதை சொல்லிவிடு

குற்றங்களை கண்டால் உன் கருத்தை சொல்லிவிடு

சுத்தமாய் வாழ்வதற்க்காய் உன் மனதை சுத்தம் செய்துவிடு

பாவம் நீ செய்யாவிடில் பயப்படத் தேவை இல்லை

பாவிகளை சேர்கா விடில் பாதையிலே பயம் இல்லை

இதுதான் வாழ்க்கை என்று வாழும் வரை வாழ்ந்துவிடு

வாழும் காலம் வரை நல்லவனாய் வாழ்ந்துவிடு

கவி மீனா

 

 

2 Kommentare:

  1. அகக்கண் கொண்டோர் ஊற்றாய் நதிபோல் ஓடும் சத்தியம்
    புறக்கண் கொண்டோர் சேற்றாய் சகதிபோல் புதைய்யோடும் அசத்தியம்..
    நீ அகக்கண் திறந்தவள்
    புறக்கண் துறந்தவள்.

    AntwortenLöschen