Freitag, 28. Juni 2024

 

உலகம் போற போக்கை பாரு 

சினிமாக்கள் சிறிசுகளை கெடுக்குது

சின்னதிரை குடும்பங்களில்

வில்லிகளை உருவாக்குது

ஆடை குறைப்பு செய்வதாலே

சினிமா உழைக்குது

அழுது அழுது பார்பதாலே

சின்ன திரை பிழைக்குது

 

ஒருவனுக்கு ஒருத்தி என்று சொன்னது அந்த காலம்

இன்று ஒன்று போனால் மற்றொன்று பிடிபது

தான் புதிய காலம்

அச்சம் மடம் நாணம் பயிர்பு எல்லாம் என்னவாச்சு

அது என்ன என்று கேட்காமலே காணாமல் போச்சு

கற்பா  மானமா அதுவும்  இல்லமலே போச்சு

 

பெண் பிறந்தால் தொல்லை

என்று எண்ணியது ஊரிலே

சீதனம் இல்லாமல் முதுகுமர் குந்தியது நாட்டிலே

இங்கு எத்தனை பெண் பிறந்தாலும்

கல்யாணமாகுது  விரைவிலே

ஒரு முறையா இருமுறையா

மறுமணமும் நடக்குதே  புலம் பெயர் வாழ்விலே

 

அன்று பெற்றவர் பட்டது சோதனை

இன்று அவர்கள் செய்வதே பெரிய சாதனை

வீடு வாசல் நகை நட்டும் தேவையில்லை

வீடு வீடாய் பெண்தேடி செருப்பும் தேய்வதில்லை

பேஸ்புக்கும் இன்ரநெற்றும் காட்டுது

காதலுக்கு சோடி சேர வழியை

கல்யாணத்தை நடத்தி விட்டால்

பெற்றவருக்கு கடமை முடியுது பாரும்

கவி மீனா

 

 

Mittwoch, 19. Juni 2024

கூடாது கூடாது

அறிவுக்கு மேலே பேச கூடாது

அதிகமாக ஆட்டம் போட கூடாது

எல்லாம் தெரிந்தது போலே நடக்கு கூடாது


பசிக்கு மேலே உண்ண கூடாது

பகிர்ந்து உண்ணாமல் இருக்க கூடாது

வரவுக்கு மேலே செலவு கூடாது

வந்ததை எண்ணி வருந்த கூடாது

 

போனதை எண்ணி அழக்கூடாது

பொறுமை இன்றி வாழ கூடாது

அதிகம் ஆசை வைக்க கூடாது

அதுவும் களவு காமம் இருக்க கூடாது

பொய்யே பேச கூடாது

அடுத்தவருக்கு துரோகம் செய்ய கூடாது

 

அன்பு காட்ட மறக்க கூடாது

அணைத்து வாழ மறுக்க கூடாது

உதவும் கரங்களை வெறுக்க கூடாது

நன்றி மறந்து போக கூடாது

நயவஞ்சகமாய் வாழ கூடாது

நாவால் துன்பம் செய்ய கூடாது

அடுத்தவர் மனசை நோக பண்ண கூடாது

 

கவர்ச்சி காட்டி உடுக்க கூடாது

அடுத்தவன் பொருளுக்கு ஆசை கூடாது

மாற்றான் துணையை பறிக்க கூடாது

அடுத்தவன் வயிற்றில் அடிக்க கூடாது

எத்தனை இருந்தாலும் இறுமாப்பு கூடாது

எதுவும் கடைசியில் கூட வரும் எண்று எண்ண கூடாது

இறைவன் இருபதை நம்பாமல் விட  கூடாது

எங்கடை கர்மா எங்களை குருமாவாக்கும்

என்பதையும்  மறக்க கூடாது

கவி மீனா