இந்த ஆண்டவனின் செயலை பாரு
நாறுகின்ற குடலை
வைத்து
அதில் ஒன்பது வாசல்வைத்து
உடல் என்னும் போர்வையால்
மூடிவைத்தான் மனிதனை
மூளையில் அறிவை
வைத்து
மூச்சு குளாயில் சுவாசம்
வைத்து
உயிர் மூச்சை உள்ளடக்கி
ஊதி வைத்தான் உடல் என்னும்
காற்றடைத்த பந்தை
ஆசை என்னும் உணர்வை
வைத்து
அவணியிலே அலைய
வைத்து
அழுகை என்றும் சிரிப்பென்றும்
நவரச உணர்வும் வைத்து
அவணி என்னும் மேடையிலே
ஆட விட்டான் மனித
பொம்மையை
நாவினிலே சுவை
வைத்து
நரம்பில்லாத நாவாலே
தீயதையும் பேச
வைத்து
பாதகங்களும் செய்ய
வைத்தான்
பாவி மனிதர் வாழ்வினிலே
பாசம் என்றும் நேசம்
என்றும்
உறவுகளை சேர்த்து
வைத்து
பிரிவு என்னும் புயல்
காற்றை
வீசி
சிதற வைப்பான் மனங்களை
நித்தமும் ஓர்
நாடகம்
நடத்தி வைப்பான் பாரினிலே
நினைவு என்னும் பேரலையை தந்து
துடிக்க வைப்பான்
மனங்களை
ஆடிய ஆட்டம் எல்லாம்
அடங்க வைப்பான் ஒரு
நாளில்
உள் மூச்சு வாங்கையிலே
உயிர் மூச்சும் அடங்கி
விடும்
அவன் செயலில்
கவி மீனா



