Sonntag, 21. Juni 2015


அன்பே சிவம்

அன்புக்கோர் எல்லை இல்லை

அது கடல் கடந்தும் போகும்

கரை புரண்டும் ஓடும்

கணணி வழி ஓடி காதோரம் பாடும்

கைகோர்த்து கூட நம் பக்கத்திலும் நிக்கும்

தொலை பேசி மூலம் காதல் கதை பேசும்

கடிதங்கள்  ஊடாக பல வடிவங்களை ஆக்கும்

கண் மூடும் போதும் கனவாக தொடரும்

அன்பு இல்லாத இதயம் பாலை வனமாகி போகும்

அன்பு கொண்ட இதயம் பூம்பொழிலாகி திகழும்

கண்ணுக்கு தெரியாமலே அது பல உள்ளங்களை தொடும்

அன்பு நிறைந்த உள்ளங்கள் ஆனந்தத்தில் ஆடும்

அன்பு இல்லா இல்லங்கள் துன்பத்தில் வாடும்

பணம் வந்து உலகத்தை ஆழுகின்ற போதும்

இந்த அன்பு ஒன்றே மனித மனங்களை ஆழும்

அன்பே சிவம் அன்பே சிவம்

கவி மீனா

இறுதி யாத்திரை

இன்று ஒரு மரண ஊர்வலத்தில் நானும் கலந்து கொண்டேன் 200 பேருக்கு குறையாமல் வெள்ளை காரர்கள், எல்லாரும் கறுப்பு நிற ஆடைகள், 

பிரேத பெட்டி மூடியபடிதான் இருந்தது பியாணோ வாத்தியத்திலும் மெழுகுதிரியின் ஒளியிலும் அந்த இடம் மிக அமைதியாக காட்ச்சி அளித்தது.

 

85 ஆம் ஆண்டிலிருந்து எனக்கு நன்கு பழக்கமான எனக்கு ஆரம்பத்தில் உதவி செய்த  ஒரு பெண்மணி அவருக்கு இறக்கும் போது வயது 96

அவருடைய மரண சடங்கில் நான கலந்து கொண்ட காரணம் அவர் பணத்தாலோ, பதவியாலோ, செல்வக்காலோ உயர்ந்தவர் எனபதற்காக அல்ல அவர்  மனித நேயம் மிக்க பெண்மணி என்பதே எனது கருத்து,  பொருள், பண்டம், வீடு, மனை என்பதை சேர்ப்பதைவிட, மனித இதயங்களிலே ஒரு இடத்தையும் நல்ல பெயரையும் சம்பாதிபதுதான் முக்கியம் என்பதற்க்கு அடையாளமாக இவர் வாழ்ந்து காட்டியுள்ளார்.

 

அங்கு எந்த ஓலமும் இல்லை, ஒப்பாரி இல்லை, காலடி சத்தம் கூட வராமல்தான் வெள்ளையர்கள் நடந்து வந்து இருந்தார்கள்.

வாழும் போதும் அவர்கள் அமைதியை கடைப்பிடிக்குறார்கள் அதே போலே கடைசி ஊர்வலத்திலும் அமைதி யாகவே சடங்குககள் நடந்தன.

பாதர் வந்து பிரத்தனையைமுடித்ததும் அந்த பெட்டியை இழுத்து செல்ல 6 பேர் வந்தர்கள் அமைதியாக இழுத்து சென்று குழியில் பெ ட்டியை இறக்க ஒவ்வொருத்தராக பூவை எடுத்து எறிந்து அமைதியாகவே வெளியேறினர்கள்.

 

„தத்தக்க பித்தக்க நாலு கால் தாவி நடக்க இரண்டு கால் முத்தி நடக்க மூன்று கால் சுடுகாடு போக பத்துகால்“ என்பது ஒரு நொடி ஆனால் இங்கு வெள்ளையரது மரணஊர்வலத்திலே சுடுகாடு போக பதினாலு கால்.

இந்த மரண சடங்கிலே ஒரு குண்டூசி விழுந்தால் கூட கேட்க கூடிய அமைதியும் இறந்தவருக்கு ஒரு மரியதையும் கொடுத்தததை காணக்கூடியதாக இருந்தது.

 

இதே நேரம் இது ஒரு தமிழனின் மரண சடங்காக இருக்க வேணும் எப்படி இருக்கும் என்று நான் சொல்லவா வேணும்?

வாழும் போதும் அமைதியில்லை தமிழனுக்கு இறந்த பின்பும் அழுகை, ஓப்பாரி, சத்தம் என்று அமைதியில்லாமல்தான் சடங்குகள் நடக்கும்.

என்னத்தை சொல்ல? எத்தனை ஆண்டுகள் தமிழர் வெளி நாட்டில் வாழ்ந்தாலும் வெள்ளையரிடம் இருந்து நல்ல விடயங்களை கற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.

 

எத்தனை திறமைகள் இருந்தாலும், எத்தன உறவுகள் இருந்தாலும், எத்தனை கோடி பணம் இருந்தாலும் யாவருக்கும் நிலையானது இந்த இறுதி நிலைதானே? ஸ்மாட் போன் கூட வருமா? ஸ்மாட் ரிவிதன் கூட வருமா? யாவும் மண்ணுக்கே!

கூட வருவது நாம் மற்றவர்களுக்கு செய்த நன்மையும் நமது பாவ புண்ணியமும்தானே?

 

சம்போ  சிவ சம்போ   சம்போ  சிவ சம்போ! 

கவி மீனா

Montag, 25. Mai 2015


மத வெறி

மதம் என்னும் பேய் பிடித்து அலையாதீர்கள்!

மத வெறி பிடித்தவனும் மதம் கொண்ட யானையும்  உலகை அழிக்க என்றே புறப்படுகின்றன,

உலகம் பூரா நடக்கின்ற யுத்தங்களுக்கு காரணம் என்ன?

மதம் என்ற பேராலே இன்று உலகில் மூலைக்கு மூலை  யுத்தம்  இதனாலே எத்தனை சத்தம்?  இதனாலே எத்தனை உயிர் சேதம்? எத்தனை பணச்சேதம்? எத்தனை அழிவு?

 

மதம் என்பது  அவரவர் சொந்த விருப்பம் யாரும் யாரையும் எப்படி கடவுளை கும்பிடவேணும்  என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, ஒவ்வொருத்தரும் தானாக உணர வேண்டிய விடயமே இறையருள்.

காற்றை நாம் காணாத போதும் காற்றை நாம் உணர்கிறோம் இதை எமக்கு யாரும் சொல்லி தரவில்லை இது போல்தான் இறையருளும்.

 

இயற்கையை பார்த்து ரசியுங்கள் அந்த அழகின் படைப்பில் ஆண்டவனை காண்பீர்கள்,

அன்பு காட்டும் மனிதர்களை நேசியுங்கள் அந்த அன்பிலே ஆண்டவனை காண்பீர்கள்,

உதவும் கரங்களை கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள் அந்த கைகளிலே இறைவனின் கருணையை காண்பீர்கள்,

 

காதுக்கினிய சங்கீதத்தை கேளுங்கள்  அந்த நாதத்தின் இனிமையிலே இறைவனின் ஓங்கார  ஒலியை கேட்பீர்கள்,

நோய் தீர்க்கும் மருத்துவரை நம்புங்கள் அவரின் திறமையிலே இறைவனை காண்பீர்கள்,

 பசி தீர்கும் மனித  மனங்களை பாருங்கள் அவர்க ளிலே ஆண்டவனின் அருளை காண்பீர்கள்,

 

நீங்கள் அமைதியான வழியிலே நடவுங்கள் உங்களை சுற்றியுள்ள இடமும் அமைதியாகும் அமைதியான இடத்தில் இருந்து பாருங்கள் மனதிற்க்கு நிறைந்த  அமைதி கிட்டும்

மனதிற்க்கும் ஆன்மாவுக்கும் அமைதிய தரவல்ல விடயங்களை  மட்டுமே செய்யுங்கள் அதிலே இறைவனின் அன்பை உணர்வீர்கள்,

மதம் பற்றி பேசாமல் சும்மா இருத்தலே மேலானது,

 கண்ணை மூடி சும்மா இருங்கள் அதுவே மனதிற்க்கு  நிறைந்த அமைதியை தரவல்ல தியானமாகிறது.

கவி மீனா

Sonntag, 24. Mai 2015


நட நட

 


நடப்பதுதான் நல்ல உடற் பயிற்ச்சி

நடப்பதால் மனதிற்க்கும் அமைதி கிட்டும்

நடப்பதால் ஆன்மாவுக்கும் நின்மதி கிடைக்கும்

கவலைகள் தொடர்ந்தால் எழுந்து நட

கோபம் வந்தால் அதை மறக்க நட

 

தீயவர்களை கண்டால் எட்டி நட

ஏளனம் செய்வோரைக் கண்டால் தூர நட

குற்றம் செய்பவரை கண்டால் தட்டி கேட்க்க பாய்ந்து நட

வறியவர்களை கண்டால் உதவி செய்ய கிட்ட நட

விழுந்தவனை கண்டால் தூக்கிவிட ஓடி நட

 

 

உண்டதை செமிக்க விரைந்து நட

உண்மையை சொல்ல பாய்து நட

பாதை மாறினால் திரும்பி நட

உறவுகளை அணைக்க அன்போடு நட

கடமைகள் முடிந்தால் கடவுளை தேடி அமைதியாக நட

நடப்பதை மறந்தால் கால்கள் இருந்தும் பயன் இல்லை

பயன் இல்லை

கவி மீனா