Sonntag, 8. Februar 2015


உறவுகள் எங்கோ

நடக்க நினைக்கும் போது கால்கள் என்னை வாரி விட்டது

நிலவை ரசிக்க நினைத்த போது தூ க்கம் என்னை தொட்டது

பாட ஆசை பட்ட போது குரலும் கட்டி விட்டது

பாசம் காட்டிய போது உறவுகள் எங்கோ சென்றது

உன்னை மறக்க நினைத்த போது நினைவுகள் மல்லு கட்டுகிறது

அறுவடை செய்யும் வேளை வெள்ளம் வந்து அழித்தது

கவி மீனா

 

 

Sonntag, 18. Januar 2015


தலைகால் புரியாமல்

புலம் பெயர் வாழ்வில்

சுதந்திரம் என்ற பெயரில்

சிதைந்தது தமிழர் வாழ்வு

அழிந்தது இன்ப தமிழின் மூச்சு

சுததந்திரம் கூடியதாலே

தறுதலையாக சுற்றுதுகள் சில இளவட்டம்

தலைகால் புரியாமல் பேசுதுகள்

நம் இனிய தமிழ் மொழியை

தமிழனுக்கில்லை இங்கே நின்மதி

அவன் வாரிசுகளுக்கு இல்லை கலாச்சாரம்

புகைக்காத கையும் இல்லை

குடிக்காத வாயும் இல்லை

பருவம் வந்தால் ஜோடியின்றி போகாத

இளசுகள் இல்லை

ஆடை மாற்றி எறிவது போல்

இது ஆளை மாற்றும் உலகம்

நாகரீகம் என்று சொல்லி

அரை குறை நாகரீகத்தில்

அலங்கோலமாய் அலைவது

சிலருக்கு தினம் வாடிக்கை

அதை பார்த்து பேசுவதே

பலருக்கு நல்ல வேடிக்கை

குண்டுமணி தங்கமின்றி ஊரில்

குமரிகள் கண்ணீரில் வாட்டம்

இங்கு ஆண்கள் கழுத்திலும் கையிலுமே

குண்டு குண்டா தொங்குது தங்கம்

தமிழர் இங்கு இரவு பகல் தெரியாமல்

காசை தேடி ஓட்டம்

இளசுகளோ சற் என்றும் பேஸ்புக் என்றும்

டீஸ்கோ என்றும் ஜோடியை தேடி ஆட்டம்

இங்கே காசு பணம் கூடி கலாசாரம் ஓடி

போனதுதானே புலம் பெயர் வாழ்வில்

கலப்பட திருமணமும் கலந்தது காதலில்

பல வித பாசையும் குழைந்தது மோதலில்

கற்பா மானமா இதற்க்கு வி ளக்கம்தான் யாரம்மா?

இந்த உண்மைகளை பேசினால் குற்றவாளி நான் அம்மா

குற்றவாளி நான் அம்மா

கவி மீனா

Freitag, 16. Januar 2015


சிரிக்க வைத்து

 
எந்த குழந்தையும் பிறக்கும்

 போது சிரிப்பதில்லை

மனித வாழ்வின் துன்பத்தை

அது அறிந்தே அழுது கொண்டே பிறக்கிறது

அழுதுகொண்டே பிறந்த மனிதனுக்கு

இறக்கும் வரை அழுகை ஓய்வதில்லை

உலகில் எங்கோ ஒருவன் சிரிக்கின்றான்

அவன் வாழும் போதும் சிரிக்கின்றான்

ஒரு சிலரே அடுத்தவரை சிரிக்க வைத்து

தானும் மகிழ்கின்றான்

மனிதர் படும் துயரை கண்டு

ஆண்டவன் எங்கோ இருந்து சிரிக்கின்றான்

கவி மீனா

Samstag, 3. Januar 2015


திரை

பனி திரை விலக்கி பகலவன் வந்து ஒளி வீசும் போதும்

நித்திரை விலகா  பல மனிதர்கள் வாழும் உலகம் இது

சித்திரை மாத்தில் சிறுவன் பிறந்தால் அக்குடி நாசம் என்பர்

பத்தரை மாற்று தங்கம் போலே மானிடரை காண்பதும் அரிது

முகத்திரை விலக்கி வெண்ணிலா வானில் எட்டி பார்க்கும் வேளை

 கணணித்திரை முன் அமர்ந்தாலே கண்கள் அகல்வதும் இல்லை

முத்திரை இல்லா கடிதம் இன்று  இ.மெயில் கடிதமானது

வெள்ளித்திரையில் மட்டும் காதல் கதைகள் கவிநயம் ஊட்டும்

மோக திரை மூடில் மனம் மையலில் ஆடும்

நரை திரை வரும் முன்னே  நம் கடமைகளை செய்து

திரை விலக ஆலயத்தில் அம்பிகை தரிசனம் தருவாள்

மாயைதரை  திரை விலக  அவள் பாதம் பணியவே

கவி மீனா

தென்றலை தேடி
 

மலரை பற்றி கவி எழுத

இங்கு மலர்கள் கூட மலரவில்லை

நிலவை பற்றி கவி பாட

நிலவும் எட்டி பார்க்வில்லை

தென்றலை தேடி அலைந்தேன்

தென்றல் கூட வீசவில்லை

காதல் பாட்டை பாடி நின்றேன்

காதலனை காணவில்லை

அருவி அழகை பாட நினைத்தேன்

அருவி கூட அருகில் இல்லை

கொட்டும் பனியை தேடி நின்றேன்

வெண்பனியும் விழவில்லை

யாரை பார்த்து நான் கவி எழுத

யாரும் என்னருகில் இல்லை

இல்லாத ஒன்றை நினைத்து

இரவு பகலாய் கவி எழுத

என்னிடம் வார்தைகளும் இல்லை

வார்தைகளும் இல்லை

கவி மீனா