Mittwoch, 15. April 2020


ஆதி சக்தி 


உலகத்தில் உள்ள அத்தனை மதங்களை பற்றி வாசித்தும் கேட்டும் அறிந்த போதிலே எல்லா மதமும் கடவுள் இருக்கிறார் என்று சொல்லுதே ஒழிய கடவுள் யார் என்று யாராலும் சரியாக சொல்ல முடியவில்லை!

யேசு சொல்லியது பரலோகத்தில் இருக்கும் பரம பிதாவை பற்றி தான் சொல்ல வந்ததாகதான் சொல்லியிருக்கிறார்.

புத்தரும் கடவுள் இருப்பதாகவும் அந்த கடவுளுக்கு நாம் எவ்வழி நடந்தால் பிடிக்கும் என்று போதனைகளை சொன்னார்.

இஸ்லாம் மதமும் மேலே உள்ள ஒரு கடவுளை பற்றிதான் சொல்கிறது யாரும் கடவுளை காணவில்லை!

ஆனால் இந்து மதம் ஒன்றுதான் கடவுள் முழுமுதல் கடவுளாக சிவனை சொல்கிறது, அதிலும் சாத்வீக மதம் இன்னும் தெளிவாக  எல்லா கடவுளையும் அதாவது சிவன் பிரம்மா விஸ்ணு என சொல்ல படுகிற மும் மூர்திகளை படைத்தததும், அவர்களுக்கு துணையாக சரஸ்வதி, பார்வதி, இலக்குமி என மூன்று சக்திகளை உருவாக்கியதும் ஆதிபராசக்தியே என சொல்கிறது.

 அதாவது எல்லா கடவுளுக்கும் இயக்கமாய் இருக்கும் ஒரு மேலான சக்தி ஒரு பெண் சக்தி எனவும் அந்த பெண்சக்தியே அண்டத்தையும் மும்மூர்திகளையும் படைத்ததாக சொல்கிறது.

மும் மூர்திகளும் அவர்களது தொழிலை அதாவது படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலை செய்வதற்கும் சக்தியை கொடுப்பவளே அந்த ஆதி சக்தி அந்த ஆதிபராசக்தியென ஆதிசங்கரும் கூறியுள்ளார்.

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறை கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தர்க்கு இளையவளே
மாத்தவளே உன்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே

ஒரு பெண்ணால்தான் ஒரு உயிரை உலகுக்கு கொண்டு வர முடியும் என்னும் போது மும் மூர்திகளையும் மூவுலகையும் அனைத்து உயிரையும் உருவாக்கியது ஒரு பெண் சக்தி என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது என்பதுதான் உண்மை!

முழு முதல் கடவுள் என்று சொல்ல படுகிற சிவனே அதிகமான நேரம் தியானத்திலருபதும்  தனக்கும் மேலான ஒரு சக்தியைதான்  தியானிபதாகவும் சொல்ல படுகிறது, அவருக்கும் மேலான ஒரு சக்தி உண்டு என்பது இதன் மூலம் தெளிவாகிறது அல்லவா?

அம்பிகை துதிக்கின்ற மதமே சாக்தம் என படுகிறது
சக்தியின் உடல் பாகங்கள் வீழுந்த இடங்கள் 51 சக்தி பீடமாக  அந்த இடமெல்லாம் இந்தியாவில் கோவில்கள் அமைத்து சிறப்பான முறையில் பிராத்தனை செய்து வருகிறார்கள் அம்பிகைக்கு!

சிவனோடு சக்தி இணைந்து நின்றாலும் சிவனுக்கு சக்தியை கொடுபது  அம்பிகை அவளே என்கிறது இந்துமதம் அதிலும் சாக்தம் என்ன சொல்கிறது என்றால்
சும்மா இருந்தால் சிவம் என்றும் இயக்கத்துக்கு வந்தால் சக்தி என்றும் சொலகிறது.

விளங்கிடு மேல்வரு மெய்ப்பொருள் சொல்லின்
விளங்கிடு மெல்லிய லானது வாகும்.
விளங்கிடு மெய்ந்நின்ற ஞானப் பொருளை
விளங்கிடு வார்கள் விளங்கினர் தானே--

என்று திரு மூலர் திருமந்திரத்தில் சொல்கிறார், அதாவது  ஒளிமயமாக விழங்குகின்ற மெல்லிய சக்தியாக பரமசக்தியாக ஞானபொருளாக திகழ்கின்றார் என்று பாடியுள்ளார்.

அப்படி பட்ட சக்தியை அம்பிகையை அந்த ஆதிசக்தியை  தொழுவோருக்கு துன்பம் ஏதும் உண்டோ?





Samstag, 25. Januar 2020



இவன் குட்டி கரணமே 
சில பேரின் வாழ்கை சிகரத்த தொடுகுது
அதிஸ்டமா இல்லை அது முயற்சியா?
யார் அறிவார் உலகினிலே?

ஊரிலை பள்ளி பக்கம் போகலை
ஆனால் வெளி நாடு வந்தது அதிஸ்டம்
பாஸை தெரியாத போதும் 40 வருடம்
வாழ்க்கை ஓடுது இங்கே!

படிப்பிலை ஆனால் பட்டம்
பெற்வர்கள் போலே திமிரு!
வேலை இல்லை ஆனால்
பெனஸ் காரில் ஊர்வலம்
வாழ்கையில் ஒரு கோடு கிழிக்க
 தெரியாது  ஆனால் தலையிலை
முகத்திலை கோடு கிழித்த பாஸன்!

கிழிஞ்ச உடையிலை இருக்க
வேண்டிய காலம் போய்
இன்று உடைகளை கிழச்சு
போடுற காலமாச்சு!
மிதந்த பல்லோட வந்தாலும்
இங்கு பல்லை கழட்டி திருத்தலாம்
கறுப்பை கூட வெள்ளையாக்க
மேக்கப் இருக்கு இங்கே!
காதலா கல்யாணமா ஒன்றல்ல 
இரண்டு மூன்று என
மாத்திக் கொண்டே போகலாம்

சேட்டிபிக்கேற்றும் களவாக இருந்தாலும்
இங்கு பொய் சொல்லியே வாழலாம்
காரணம் ஜேர்மன் காரனுக்கு
 நம்ம பாஸை தெரியாதே!
வயதை கூட்டலாம் குறைக்கலாம்
சோடியை மாத்தியும் சொல்லலாம்
கூட்டி வந்தவளை பெண்டாட்டி என்று
சொன்னாலும் உலகம் நம்புது
ஜேர்மன் காரனுக்கு தெரியவா போகுது
அசூல் என்ற பேரிலே எல்லா
பொய்யும் சொல்லலாம்
பிடிபட்டால் தலை கரணம் பிடிபடாட்டி
இவன் குட்டி கரணமே போடுவானே!

தமிழனுக்கு சுதந்திரம் இல்லை
ஆனால் புலம் பெயர் தமிழனுக்கு
தலை தெறிக்க சுதந்திரமுண்டு!
நிறையவே சுதத்திரம் உண்டு!


Samstag, 30. November 2019


மண்ணுக்கே பாரமாய்

 பள்ளி காலத்தே படிக்க மனமில்லாமல்
இளமை இருக்கும் போது உழைக்காமல்
தன் சொந்த காலில் வாழ முடியாமல்
அடுத்தவனை நம்பி வாழ்பவனுக்கு
சோறு போடுவதும் உதவி பண்ணுவதும்
புத்திலிருக்கும் பாம்புக்கு
 பால் ஊத்துவது போலதான்

ஊனமுற்றோருக்கு உதவுங்கள்
அனாதை குழந்தைகளுக்கு உதவுங்கள்
முதியோருக்கும் வயோதிப பெற்றோருக்கும்
உதவுங்கள் ஆனால் ஒரு நாளும்
சோம்பேறிகளுக்கும் திண்ணைக்கு
மண் எடுக்கும் உதவாக்கரைகளுக்கும்
உதவாதீர்கள்!

மிரட்டி அடுத்தவன் சொத்தை
பறிப்பவனுக்கும்
பயந்து  தானம் பண்ணாதீர்கள்
இவர்கள் பெற்றவருக்கும்
உற்றவருக்கும் பாரமாய்
இந்த மண்ணுக்கே பாரமாய்
வாழும் ஈன பிறவிகளே!

கவி மீனா



நிலவும் நானும் 

நிலவோடு வான் முகில் விளையாடுதே!
என் நினைவோடு உந்தன் முகம் அலை பாயுதே!
நிலவை கண்டாலே பாடல் தானாக வருகுது இயற்கை அழகில் நிலவுக்கு ஒரு தனி இடம், என்றும் மாறாத காதல் எனக்கு நிலவிடம், எத்தனை தடவை பார்த்தாலும் நித்தம் நித்தம் பார்த்தாலும் அதன் அழகை அள்ளி பருக கண்கள் போதாமை இருக்கும். நிலவை கிட்ட போய் பார்த்தவர்கள் அது கல்லும் மண்ணும், குண்டும் குழியும் நிறைந்த ஒரு இடம் என்கிறார்கள் ஆனால் பூமியில் நின்று பார்கும் எமக்கு நிலவு ஒரு அழகு தேவதை!
நிலவை பற்றி எண்ணற்ற பாடல்களை கவிஞர்கள் எழுதி விட்டார்கள், பாடகர்கள் அதை பாடியும் விட்டார்கள் ஆனாலும் தினம் தினம் புது கவிதைகள் நிலவை பற்றி எழுதலாம் எழுதி கொண்டே இருக்கலாம் முழு நிலா பார்க்க பார்க்க தெவிட்டாத பேரழகு மட்டுமின்றி பார்த்தவர் மனதுக்குள் ஒரு  மன நிறைவை, மகிழ்சியை தர கூடிய ஒரு சக்தி நிலவுக்கு உண்டு.

நிலவுக்கு இருக்கும் ஈர்பு சக்தியில் ஒரு காந்த அலைகள் வீசுவதாக சொன்னார்கள் முன்னோர்கள், அந்த கதிர் வீச்சில்தான் கடல் அலைகள் பூரண நிலவு அன்று பொங்கி பெருகுவதாக நம்பப் படுகிறது.
பால் நிலாவின் ஒளியில் பரவசத்தை நாம் உணர முடியும் அதன் ஒளி பட்டாலே பேரின்பம் தானாக உண்டாகும், மை இருட்டு நேரத்தில் நிலவின் ஒளியில் உலகம் காணும் அழகே தனி அழகுதான், மனிதர்களுக்கு இரண்டு கண்ணும் அவசியம் அது போலேதான் பூமிக்கு சூரியனும் சந்திரனும் இரண்டு கண் போலே அத்தியா அவிசயமாகிறது.

நிலவை கண்டு அல்லி பூ மலருகிறது காரணம் நிலவின் ஒளி பட்டு அது காதல் கொண்டு விரிகிறது,  நிலவின் அழகில் மயங்காதவர் யாராச்சும் உண்டா?
நல்ல ரசனை உள்ள கவிஞர்களுக்கு  நிலவை காணும் போதெல்லாம் கவிதை தோன்றும்,  கண்கள் நிலவின் அழகை ரசிக்க கைகள் அதன் அழகை கவிதைகளாக வடிக்கும்.
நிலவே வான் நிலவே  வார்தை ஒன்று பேசு என்று நானும்  நிலவை காணும் போதெல்லாம் கேட்பேன்.
 ஆனால் நிலவு சிரித்த முகத்தோடு முகிலுக்குள் ஓடி மறையும்.
நிலவை பற்றி எத்தனை பாடல்கள் அன்றும் இன்றும், நிலவை வெறுப்பவர் யாரும் இல்லை.
நிலாவை பெண்ணாக பார்த்து பாடியவர்களும் உண்டு ஆணாக நினைத்து காதல் வரிகள் எழுதியவர்களும் உண்டு, நிலவு பார்பவர் மனதுக்கும், மனநிலைக்கும் எற்றாற் போலே கற்பனை வழத்தை அள்ளி தருகிறது.
நிலாவே வா செல்லதே வா
என்னாளும் உந்தன் பொன் வானம் நான் என்ற பாடல் எனக்கு பிடித்த ஒரு பாடல் எப்ப நிலவை கண்டாலும் இந்த பாடல் தானாக பாட வருகிறது காரணம்  நிலவோடு காட்சி தரும்  வானமாக நீல வானமாக இருக்கதான் மனது ஆசை கொள்ளும்.
என் கற்பனையில் நிலவு ஒரு ஆணாக அழகான என்றும் புன் சிரிப்பை சிந்தும் காதலனாக தெரிவதாலோ என்னுவோ
என்னாலே பூமியிலே ஒரு ஆண் மகனையும்  நேசிக்க முடிவதில்லை!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதை இல்லை  உன்னை தொட வழியும் இல்லை - இந்த பாடலை  கவிஞர் வைரமுத்து எனக்காகதான் எழுதியது  போலவும் பாடகர் பால சுப்பிர மணியம் எனக்காக பாடியது போலவும் எனக்குள் ஒரு கற்பனை ஓடி வரும் இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் காரணம் நிலவை நான் அம்மட்டு நேசிப்பதுண்டு.
நிலவை பற்றி நானும் நிறைய எழுதி விட்டேன் ஆனாலும் அதை பற்றி எழுத எழுத பொங்கும் உற்று போலே ஆசை பெருகி கொண்டு வரும் எழுத வார்தைகள்தான் போதமை மனது தடுமாறும்.
நிலவை பற்றி நான் எழுதிய ஒரு கவிதை முதல் முதலாக வானொலியில் வாசிக்க பட்ட போது நானும் பெருமிதம் கொண்டேன் அதுவே எனது முதல் கவிதை வானொலியில் வாசிக்கபட்ட கவிதை!
மேலும் பாடகர் சிறினிவாஸ்  பாடிய  ஒரு  இனிய சோக பாடல் ஒன்று என் உள்ளத்தை கொள்ளை கொண்ட பாடல்
அதுதான் இன்று எனக்கு பொருத்தமான பிடித்தமான பாடலாக என்றும் பாடுகின்ற பாடலாக அமைந்து விட்டது
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை என்ற பாடலாகும்  இந்த பாடலில் பாடகரின் குரலில் ததும்பும் சோகம் எம்மையும் அந்த நிலைக்கு கொண்டு போய் விடும் எமது சோகங்களை நாம் மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது
ஆனால் நிலவிடம் மனம் விட்டு பேசலாம் அது யாரிடமும் போய் சொல்லாது மீண்டும் எம் கதை கேட்க  அது மறு நாளும் வரும்
நிலவுக்குதான் எனது சோகங்களும் காதலும் புரியும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை எனக்கு!